மக்கள் சேவைகளை இலகுவாக்கபொலிஸாருக்கு 56 மில்லியன் ரூபாய்நவீன தொழில்நுட்ப உபகரணங்கள்

மக்கள் சேவைகளை இலகுவாக்கபொலிஸாருக்கு 56 மில்லியன் ரூபாய்நவீன தொழில்நுட்ப உபகரணங்கள்

இலங்கை பொலிஸாருக்கு 556 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

நேற்று அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் இந்த உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.

556 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த தொழிநுட்ப உபகரணங்களின் விபரம்

கணினிகள்: 1,718 அலகுகள் (ரூ. 365 மில்லியன்)

நிழற்படப்பிரதி (Photocopy) இயந்திரங்கள்: 575 அலகுகள் (ரூ. 129 மில்லியன்)

வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் (Speed detection devices):
ரூ. 45 மில்லியன் பெறுமதியானது.

மின் விநியோகத் தொகுதிகள் (UPS):
1,750 அலகுகள் (ரூ. 17 மில்லியன்)

போலீசாருக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப மற்றும் பௌதீக வளங்களை வழங்குவதன் மூலம்
செயல்பாட்டு ரீதியான வேகம் அதிகரிப்பதுடன் , பொதுமக்களுக்கான சேவைகளை விரைவாகவும் தரமாகவும் வழங்குதல் மற்றும் விசாரணைகளையும் நிர்வாகப் பணிகளையும் இலகுவாகவும் துல்லியமாகவும் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் சட்ட அமுலாக்கத்தை வலுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விசாரணை மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில், அண்மைக் காலத்தில் வழங்கப்பட்ட மிகப்பெரிய ஒதுக்கீடாகக் இந்த நிகழ்வு கருதப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )