2023 பெப்ரவரி 15 வரை 436,000 சுற்றுலாப் பயணிகள்இலங்கை வருகை

2023 பெப்ரவரி 15 வரை 436,000 சுற்றுலாப் பயணிகள்இலங்கை வருகை

சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் , இந்த வருடத்தின் பெப்ரவரி 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை கொழும்பில்நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் 15 நாடுகளை இலக்காகக் கொண்ட உலகளாவிய சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

உலகளவில் இலங்கையை மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்த சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ,சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒப்பீட்டளவில் உயர்ந்த மட்டத்தில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )