
ஈரானில் உச்ச அதிகாரம் மூவர் குழுவிற்கு மாற்றம்
ஈரானின் உச்ச தலைவருக்குச் சொந்தமான அனைத்து அரசாங்கப் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் தற்காலிகமாகச் செயல்படுத்த மூன்று பேர் கொண்ட நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்வாகக் குழுவில் தற்போதைய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், நீதித்துறைத் தலைவர் மற்றும் கார்டியன் கவுன்சிலின் பிரதிநிதி ஆகியோர் அடங்குவர்.
பொதுவாக, ஈரானில் உள்ள அனைத்து முக்கிய நிர்வாக மற்றும் பாதுகாப்பு அதிகாரங்களும் உச்ச தலைவர் அலி கமேனியிடம் உள்ளன.
இந்தச் சூழலில், புதிய நிர்வாகக் குழு, நாட்டின் இராணுவ நடவடிக்கைகள், வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

