ஈரானுக்கு எதிராக நேரடித் தாக்குதல்களில் பிரித்தானியா பங்கேற்காது

ஈரானுக்கு எதிராக நேரடித் தாக்குதல்களில் பிரித்தானியா பங்கேற்காது

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுத்து வரும் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கு ஐக்கிய இராச்சியம் ஆதரவளிக்காது என்று பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களிலேயே அல்லது அவை ஏவப்படுவதற்குத் தயாராக உள்ள நிலையிலேயே அவற்றை அழிப்பதற்காக, பிரித்தானிய இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியுள்ளதாகப் பிரதமர் இதன்போது வெளிப்படுத்தினார்.

பிராந்தியம் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே அமெரிக்காவின் இந்த வேண்டுகோளுக்கு இணங்கியதாகப் பிரதமர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமது நாட்டு இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்த போதிலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொள்ளும் நேரடித் தாக்குதல் நடவடிக்கைகளில் பிரித்தானியா ஒருபோதும் பங்காளியாக இருக்காது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் ஏவுகணை ஏவுதல் திறனை முடக்குவதற்காகத் தங்கள் நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியும் தயாராக இருப்பதாகப் பிரதமர் ஸ்டார்மர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )