நடுவானில் 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன – சவூதி அரேபியா
சவூதி அரேபியாவின் விமானப்படை தளம் மற்றும் கிழக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தாங்கள் முறியடித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இன்று (11) சவூதி அரேபியாவை நோக்கிப் பல திசைகளிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன.
இதில் குறைந்தது 7 பலிஸ்டிக் ஏவுகணைகளை (Ballistic Missiles) சவூதி வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.

