சவுதியில் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு!
சவுதி அரேபியாவில் தூதரகங்கள் அமைந்துள்ள முக்கிய பகுதிக்குள் நுழைய முயன்ற ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“Embassies District” என அழைக்கப்படும் அந்த பாதுகாப்பு மண்டலத்தை நோக்கி வந்த குறித்த ஆளில்லா விமானத்தை சவுதி பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக தடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மணிநேரங்களாக சவுதி பாதுகாப்பு படைகள் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதுடன், ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையும் தடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன .
TAGS defence ministryEmbassies DistrictHot NewsPrince Sultan Air Basesaudi arabiaSri lankaWorld News

