உக்ரைனுக்கு 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான இராணுவ உதவியை ஸ்பெயின் வழங்குகிறது

உக்ரைனுக்கு 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான இராணுவ உதவியை ஸ்பெயின் வழங்குகிறது

கடந்த 4 ஆண்டுகளாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தப் போரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஒரு தீர்வு எட்டப்படவில்லை.

போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்த போதிலும், இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடான ஸ்பெயின், உக்ரைனுக்கு சுமார் 9,000 கோடி ரூபாய் (1 பில்லியன் யூரோக்கள்) மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது.

இந்த உதவியின் கீழ், ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளன. “போர் முடியும் வரை உக்ரைனுக்கான எங்கள் ஆதரவு தொடரும்” என்று ஸ்பெயின் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )