
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் ; லிட்ரோ நிறுவனம்
சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் எரிசக்தி தேவையில் ஏற்பட்டுள்ள உயர்வின் தாக்கத்தால், ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் புதிய விலை உயர்வு அமலுக்கு வரக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

