ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு

ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகிய உணவுகளின் விலைகள் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், சிற்றுண்டி வகைகளின் விலைகள் 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் மின்சாரக் கட்டண உயர்வை முன்னிட்டு, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உணவகங்கள் இயங்கும் பெரும்பாலான இடங்களில் மின்சார பயன்பாடு 180 அலகுகளை மீறும் நிலையில், அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதால், தொழிலை தொடர்ந்து முன்னெடுக்க இந்த விலை உயர்வு தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஹர்ஷண ருக்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )