ஈரானிய வான் பாதுகாப்புத் தாக்குதலில் மற்றுமொரு அமெரிக்க போர் விமானம் மத்திய கிழக்கில் வீழ்த்தப்பட்டது

ஈரானிய வான் பாதுகாப்புத் தாக்குதலில் மற்றுமொரு அமெரிக்க போர் விமானம் மத்திய கிழக்கில் வீழ்த்தப்பட்டது

ஈரானிய வான் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி அமெரிக்காவின் A-10 போர் விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளதாக, ஈரானிய இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க விமானப்படையின் இரண்டாவது போர் விமானம் வீழ்ந்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

விமானியின் இருப்பிடம் அல்லது நிலை குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன், பென்டகன் அல்லது வெள்ளை மாளிகை இது குறித்து உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

‘வார்தாக்’ (Warthog) என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் A-10 போர் விமானமானது, ஒரு விமானி மாத்திரம் பயணிக்கக்கூடிய ஒற்றை இருக்கை கொண்ட விமானமாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )