
தங்கத்தின் விலையில் மாற்றமா ?
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் (07) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய சந்தை விலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினமும் அதே விலை நிலவரமே தொடர்வதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

