லெபனானை குறிவைத்து நடத்திய தொடர் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி வழங்கப்படும் ; ஈரான்

லெபனானை குறிவைத்து நடத்திய தொடர் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி வழங்கப்படும் ; ஈரான்

லெபனானை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த தாக்குதல்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், அமெரிக்கா–ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

நேற்று (08) குறுகிய 10 நிமிட இடைவெளியில் லெபனானின் பல பகுதிகளில் உள்ள சுமார் 100 இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 1,165 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் குடிமைப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய நடவடிக்கைகளில் இது மிகப்பெரிய மற்றும் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தாக்குதலால் பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மை மீதான அச்சங்கள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து நடைபெறும் மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் பெரும் பதற்றத்தை உருவாக்கக்கூடும் என சர்வதேச சமூகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )