
10 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
சிலாபம் – தெதுரு ஓயா பகுதியில் பாரியளவிலான கஞ்சா மற்றும் பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபப் பிரிவு போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (09) மதியம் தெதுரு ஓயா பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, 10 கிலோகிராம் 787 கிராம் அளவிலான கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

