இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார்

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று கொழும்பு வந்தடைந்தார்.

இந்தியத் துணைத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும் எனவும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் கருதப்படுகிறது.

இந்திய அரசின் நன்கொடையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அவர் இதன்போது பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளார்.

அவர் இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்துக் கலந்துரையாடவுள்ளதுடன் மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு மேலும் ஒத்துழைப்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )