அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஓமான் வளைகுடாவில் அமெரிக்க கடற்படைக்கு எதிராக ஈரான் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் செய்தி நிறுவனம் Tasnim வெளியிட்ட தகவலின்படி,

ஓமான் வளைகுடாவில் அமெரிக்க கடற்படையின் கப்பல்களை இலக்காகக் கொண்டு ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக, அமெரிக்க கடற்படை ஈரான் கொடியுடன் பயணித்த சரக்கு கப்பலை கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து பதிலடி நடவடிக்கையாகவே இந்த ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரானின் உயர்மட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அமைப்பான Khatam al-Anbiya Central Headquarters
அமெரிக்க கடற்படையின் நடவடிக்கையை போர்நிறுத்த ஒப்பந்த மீறலாகக் கண்டித்துள்ளது.

மேலும்,“அமெரிக்க கடற்படையின் ஆயுத கொள்ளை நடவடிக்கைக்கு எதிராக பதிலடி வழங்கப்படும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )