தெற்கு லெபனானில் தொடரும் பதற்றம் – பொதுமக்களுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

தெற்கு லெபனானில் தொடரும் பதற்றம் – பொதுமக்களுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

தெற்கு லெபனானில் உள்ள பொதுமக்களுக்கு, குறிப்பிட்ட கிராமங்களைத் தாண்டி தெற்குப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பின்படி, லிட்டானி ஆற்றிற்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தெற்குப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் இஸ்ரேல் படைகள் இன்னும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் , Beit Siyad Farm, Majdal Zun, Zabqin, Yatar, Sarbin, Hula, Beit Yahun, Shaqra, Majdal Salm, Qabriqa, Farun, Zutr al-Gharbiyya, Yahmar al-Shaqif, Arnun, Deir Mimas, Marjayoun, Aabbel al-Saqi, Al-Mari, Kfar Shouba, Ain Qana மற்றும் Ain Atta ஆகியவை அடங்குகின்றன.

இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் அவிச்சாய் அட்ராய் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு லெபனானின் எல்லைப்பகுதிகளில் உள்ள பல கிராமங்களுக்கு பொதுமக்கள் மீண்டும் திரும்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )