
இந்தியாவில் உள்ள பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இந்தியா முடக்கியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து
இந்தியாவில் உள்ள பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இந்தியா முடக்கியுள்ளது.
நேற்று முடக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோரின் கணக்குகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
டெஸ்ட் கேப்டன் ஷான் மசூட் , வேகப்பந்து வீச்சாளர்கள் ஹசன் அலி மற்றும் நசீம் ஷா, பேட்ஸ் மேன் இமாம்-உல்-ஹக்
மற்றும் ஷதாப் கான் ஆகியோரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பாகிஸ்தான் நட்சத்திரங்கள் சோயிப் அக்தர் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோரின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மேலும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கணக்கை இந்தியாவில் அணுக முடியாது என கூறப்பட்டுள்ளது .
ஏப்ரல் 22 அன்று, தெற்கு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரமான பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியா நேரடியாகக் குற்றம் சாட்டியது. இந்நிலையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதக சர்வதேச ஊடக செயதிகள் தெரிவிக்கின்றன.

