
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக சீனா நன்கொடை
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான 5,171 மில்லியன் ரூபாய் பெறுமதியான துணி முழுவதும் சீன அரசாங்கத்தின் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று (16) பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, 2025 ஆம் ஆண்டிற்கான முழு சீருடைத் தேவையும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கும் சான்றிதழ்கள் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உடன் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
TAGS chinaChinese Ambassador to Sri LankadonatesHarini Amarasuriyaprime ministerQi ZhenhongSri lankauniforms

