தங்காலையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனங்கள் கண்டுபிடிப்பு

தங்காலையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனங்கள் கண்டுபிடிப்பு

தங்காலை – நெதோல்பிட்டிய  பகுதியில் இன்று (07) ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாக  கூறப்படும்  இரசாயன பொருட்களின் தொகை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, தங்காலை பொலிஸார் இன்று (07) நெதோல்பிட்டிய வெலிவன்ன கிராஸ் மாவத்தையை ஒட்டிய ஒரு நிலத்தில் சிறப்பு சோதனை நடத்தினர்.

அதன்போது குறித்த நிலத்தில் வெள்ளை நிற இரசாயனப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த பொருள் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )