கொள்கை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பிலான ஒத்துழைப்பு குறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர்  NITI Aayok விஜயம்

கொள்கை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பிலான ஒத்துழைப்பு குறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் NITI Aayok விஜயம்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மத்திய அரசாங்கத்தின் உச்ச நிலை தேசிய மூலோபாயம், புத்தாக்கம் சார் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான நிறுவன மையமான சிந்தனைக் குழுவான NITI Aayog (National Institution for Transforming India) இன் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்தார்.

கொள்கை வகுப்பாக்கத்தில் இந்தியாவின் நவீன அணுகுமுறையானது, விரைவான பொருளாதார வளர்ச்சியை உருவாக்க எவ்வாறு உதவியுள்ளது, இதிலிருந்து இலங்கை என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து இந்தக் கலந்துரையாடல் அடிப்படையாக அவதானம் செலுத்தியது.

May be an image of one or more people, hospital and text

நீண்டகால அடிப்படையில் தேசிய மூலோபாயங்களை உருவாக்கிக் கொள்வதற்கு அரசாங்கம், தொழில் முயற்சியாண்மைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை NITI Aayog நிரூபிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

இந்தியாவில், Aspirational Districts Programme, Atal Innovation Mission மற்றும் Production-Linked Incentive (PLI) போன்ற நிகழ்ச்சித் திட்டங்கள் எடுத்துக் காட்டும் அடிப்படையில், தொழில்துறை மற்றும் புத்தாகக் கொள்கைகள் உலகளாவிய வர்த்தக உள்ளடக்கத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை அவர் இதன்போது சுட்டிக்காட்டிக்காட்டினார்.

May be an image of one or more people, newsroom and text

இதன்பிரகாரம், டிஜிட்டல் நிர்வாக ஆளுகை, சமூகப் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சி குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு NITI Aayog மற்றும் இலங்கையின் தேசிய திட்டமிடல் திணைக்களம் அல்லது லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகம் (LKI) இடையே ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொள்வதற்கான யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு முன்மொழிந்தார்.

May be an image of dais

இந்த மாற்றத்திற்கு வெறுமனே இலட்சியம் மட்டுமல்லாது, தரவு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலான வலுவான கொள்கை வகுப்பாக்கமொன்று தேவை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். இதன்பிரகாரம், புத்தாக்கம் சார் புதிய கண்டுபிடிப்புகள், பொருளாதார போட்டித்தன்மை மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்காக இந்திய-இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தரப்பினரும் இங்கு இணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )