
ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு
அக்கரப்பத்தனை, ஆக்ரா தோட்டப் பகுதியிலுள்ள, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 85 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அக்கரைப்பத்தனை பொலிஸார் சடலத்தை மீட்டதோடு, மரண விசாரணைகளின் பின்னர் நுவரெலியாக மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

