அனுராதபுரத்தில் விகாரையில் புதையல் தோண்டிய தேரர் கைது

அனுராதபுரத்தில் விகாரையில் புதையல் தோண்டிய தேரர் கைது

அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர், தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

119 அவசர தொலைபேசி எண்ணின் மூலம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், சந்தேகநபரான தேரர் தனியாகவே சுமார் 4 அடி ஆழம் வரை தோண்டியிருந்ததை கண்டறிந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )