
சமன் ஏகநாயக்க நீதிமன்றில் ஆஜர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க இன்று (11)கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் தனிப்பட்ட முறையில் பங்கேற்க லண்டன் சென்றதாகவும், அந்தப் பயணம் மூலம் அரசாங்கத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

