ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்

ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்

எதிர்க்கட்சிக் குழுக்கள் இன்று (25) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் போது தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி விவகாரம், பாதாள உலகக் கொலைச்சம்பவம் மற்றும் எரிவாயு பிரச்சினை உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பில் உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜி.எல்.பீரிஸ், மஹிந்த அமரவீர, சாகல ரத்நாயக்க, தலதா அதுகோரள, பிரேம்நாத் சி.தொலவத்த, சுகேஸ்வர பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )