எந்தவொரு போரும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்காது

எந்தவொரு போரும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்காது

மத்திய கிழக்கில் இராணுவ நிலைமையைக் கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான உலகத்திற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டுதலையும் விரைவில் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (03) பாராளுமன்றத்தில் மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் அவர், “எந்தவொரு போரும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்காது.

தொழில்நுட்ப ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், மிகப் பெரிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கி வரும் உலகத்திற்கு அது எவ்வளவு பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

எனவே இலங்கையாக நமது நிலைப்பாடு என்னவென்றால், இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும்
அமைதியான உலகத்திற்குத் தேவையான உறுதிமொழிகளையும் வழிகாட்டுதல்களையும் மிக விரைவில் உருவாக்குவதாகும்.”

இந்தப் போர் சூழ்நிலையில் இலங்கை மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்றும், தனிமையில் இருந்து நாம் வெளியேற முடியாது.

ஒரு நாடாக இதைச் சமாளிக்க ஒரு திட்டம் தயாரிக்கப்படும், அமைதியான உலகத்திற்கான சர்வதேச அர்ப்பணிப்பு மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

மத்திய கிழக்கில் நடக்கும் போர் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபடக்கூடும் , வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்படும் , சுற்றுலாத் துறை, வெளிநாட்டு பணம் அனுப்புதல், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத் தொழில்களும் பாதிக்கப்படும்.

இந்தப் போர் சூழ்நிலையால் குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் , கடந்த காலத்தின் விரும்பத்தகாத அனுபவங்களால் மக்கள் இதுபோன்ற சூழ்நிலையில் பீதி அடைவது இயல்பானது.” என தெரிவித்துள்ளார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )