
ஹோமாகமவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஹோமாகம பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (07) பகலில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 14 கிராம் 420 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பாதுக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

