
மத்திய கிழக்கு போர் : எகிப்தில் எரிபொருள் விலை 30 சதவீதம் வரை உயர்வு
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போரின் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை தொடர்ந்து எகிப்து அரசு எரிபொருள் விலைகளை 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
எகிப்தின் பெட்ரோலியம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி,
பெட்ரோல், டீசல் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் இந்த உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள பதற்றங்கள் உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், போர் சூழ்நிலை காரணமாக எண்ணெய் வழங்கல் மற்றும் கடல் போக்குவரத்து வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உலகளவில் எரிபொருள் சந்தை அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

