
அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நிதி இழப்பீடு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவராகப் பணியாற்றிய தம்மிக ரணதுங்க உட்பட இருவரும், உள்ளூர் டெண்டர்களை தன்னிச்சையான முறையில் கையாண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தை விலையை விட அதிக விலைக்கு ஒப்பந்தங்களை அனுமதித்ததன் மூலம் அரசாங்கத்துக்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சட்டமா அதிபர் திணைக்களம், போதிய சான்றுகளின் அடிப்படையில் இருவருக்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

