லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 9 பேர் பலி!

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 9 பேர் பலி!

லெபனானின் தெற்கு பகுதியில்இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, லெபனானின் Adloun பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், Mieh Mieh refugee camp பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றை இலக்காகக் கொண்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு முன்னர், Habboush நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 3 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் லெபனானின் தெற்கு பகுதிகளில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )