
மூன்று மாத எரிபொருள் நிவாரணம் ; ஜனாதிபதி அறிவிப்பு
அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அரசாங்கத்தின் சிறப்புச் சலுகைகளின் கீழ், ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் ரூ. 100 மற்றும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ. 20 நிவாரணம் வழங்கப்படும்.
இதற்காக மாதத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்படும் என்றும், 3 மாதங்களில் மொத்தமாக ரூ. 600 கோடி செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

