2026 மார்ச் மாதம் முடிவுக்கு வரும், கொரிய பரீட்சையில் சித்தியடைந்த 10,000 போருக்கு இன்னும் தொழில் கிடைக்கவில்லை

2026 மார்ச் மாதம் முடிவுக்கு வரும், கொரிய பரீட்சையில் சித்தியடைந்த 10,000 போருக்கு இன்னும் தொழில் கிடைக்கவில்லை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் இன்று (19) எழுப்பிய கேள்வி.

இலங்கைக்கு கிடைக்கப்பெற்று வரும் அந்நிய செலாவனியில் பங்களிக்கும் மிக முக்கியமான துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை கருதலாம். இவற்றில், கொரியக் குடியரசு தொழில்வாய்ப்புகள் விசேட இடத்தைப் பிடித்துள்ளன.

ஆனால் கடந்த சில வருடங்களாக கொரிய குடியரசில் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு தகுதி பெற்றிருந்தாலும், தொழில் வாய்ப்புகள் கிடைக்காமையால் காத்திருப்போர் பட்டியலில் காணப்படும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன.

இத்தகைய நிலைமைக்கு மத்தியில் கொரிய குடியரசோடு பேணப்பட்டு வரும் Employment Permit System (EPS) திட்டத்தின் கீழ் இருதரப்பு ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதற்கு அரசாங்கத்தின் தலையீடு அவசரமானதாகவும் அவசியமானதாகவும் காணப்படுகின்றன.

இந்த ஒப்பந்தம் மார்ச் 2026 முதல் புதுப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கப்படாத பட்சத்தில் இந்நாட்டைச் சேர்ந்த சுமார் 10,000 இளைஞர் யுவதிகள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் இந்த விடங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளதால் பின்வரும் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

  1. இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் இலங்கைக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நாடுகள் யாவை? இவற்றில், கொரியக் குடியரசு பெற்றுத் தரும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையை எந்த வகைகளின் கீழ் பெற்றுத் தருகின்றன என்பதை தனித்தனியாக இந்தச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா?
  2. கடந்த ஐந்து ஆண்டுகளில் கொரியக் குடியரசு பெற்றுத் தரும் தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? ஆமெனில், அதற்கான காரணங்கள் என்ன? இது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஆராய்வுகள் யாவை? அவற்றை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?
  3. கொரியக் குடியரசில் வேலை செய்வதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ள, இணையதளத்தில் பதிவு செய்த வேலை தேடுவோர், 02 ஆண்டுகள் முடிந்த பிற்பாடு தானாகவே விண்ணப்பங்களை மீளப் பெற வேண்டியதன் மூலம் அந்த விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் அநீதியைத் தடுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா?

    இது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை ? இந்தக் காத்திருப்பு காலத்தை நீட்டிக்க தற்போதைய அரசாங்கம் கொரிய குடியரசுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதா? ஆமெனில் அதன் முன்னேற்றம் யாது ?
  4. கொரிய குடியரசில் தொழில்வாய்ப்புகளுக்கான காத்திருப்புப் பட்டியிலுள்ள 9000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு விசேட இணக்கப்பாடுகள் அல்லது முன்னுரிமை திட்டங்களை விரைவாக முன்னெடுக்க அரசாங்கம் தயாரா?
  5. கொரியக் குடியரசு தவிர்ந்து, புதிய தொழில் சந்தைகளில் நுழைய தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இருதரப்பு (Bilateral/G2G) ஒப்பந்தங்கள் யாவை ?
  6. 2011 இல் இத்தாலிய அரசோடு கையெழுத்திடப்பட்ட G2G ஒப்பந்தத்தின் கீழ், 2014 இல் நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்து, ஆனால் தொழிலுக்குச் செல்ல முடியாத விண்ணப்பதாரர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கான காரணங்கள் யாவை ?

    இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை யாவை? இந்த தரப்புக்கு நிவாரணப் பொறிமுறையொன்றை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? இல்லையென்றால், ஏன்?
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )