
ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ட்பதிவுத் திணைக்களத்தின் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் இலக்கங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பெற முயலும் மோசடிக் கும்பல் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, 0115 226 126 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து வரும் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தகைய அழைப்புகள் வந்தால், தேசிய அடையாள அட்டை விவரங்கள் உள்ளிட்ட எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் வழங்காமல் இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது தகவல்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் ஆட்பதிவுத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

