
பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (10) நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

