
வெசாக் – பொசன் தானசாலைகள் ; நாடளாவிய ரீதியில் பதிவு நடவடிக்கை ஆரம்பம்
எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பூரணை தினங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தானசாலைகளை நடத்த திட்டமிட்டுள்ள ஏற்பாட்டாளர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமில் முத்துகுட தெரிவித்ததாவது, தானசாலைகளை ஏற்பாடு செய்யும் குழுவினர் அல்லது தனிநபர்கள் தாங்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகரை நேரில் சந்தித்து பதிவு செய்துகொள்வது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தானசாலைகள் முறையாக நடைபெறுவதையும், சுகாதார விதிமுறைகள் பேணப்படுவதையும் உறுதிப்படுத்தும் நோக்கில், ஏற்பாட்டாளர்கள் தானசாலை நடைபெறும் துல்லியமான இடம் மற்றும் வழங்கப்படவுள்ள உணவு அல்லது சேவைகளின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

