யாழில் 48 மணிநேரத்தில் 13 பேர் கைது

யாழில் 48 மணிநேரத்தில் 13 பேர் கைது

யாழ்ப்பாணம் நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சோதனைகளின் போது ஹெரோயின் மற்றும் பல்வேறு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )