
செம்மணி புதைகுழி ; வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
”செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும்” ”உண்மை கண்டறியபடவேண்டும்” என கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று (20) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை அரசே எம்மிடம் இருந்த வலிந்து அபகரிக்கபட்டு படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோரின் பெறுமதி மிக்க நீதி கோருகின்றோம். எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் செம்மணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் பொழுது பாதிக்கப்பட்ட தரப்பினர் பொதுமக்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் மதகுரு தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இதேவேளை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காகவும் செம்மணி புதைகுழி பாதுகாக்கும் முகமாகவும் அதிகளவு பொலிஸார் போராட்டகளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதீபன்


CATEGORIES Sri Lanka

