
தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி
தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எயார் சீப் மார்ஷல் (ஓய்வு) ஆர்.ஏ.யு.பீ. ராஜபக்ஷவின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் குழு இன்று (30) பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

