
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரசன்ன ரணவீரவை செப்டம்பர் 8 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
CATEGORIES Sri Lanka

