
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டமூலம் நேற்று(10) பாராளுமன்றத்தில் திருத்தங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

