ஜனாதிபதி இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்

ஜனாதிபதி இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை (Shigeru ISHIBA) சந்தித்து கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

இதன்போது, இரு நாடுகளின் பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )