போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்குளம் பகுதியில் வைத்து வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம் கல்குளம் பகுதியில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சந்தேக நபரிடம் இருந்து 50 கிராம் 850 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளினையும் அடுத்த சந்தேக நபரிடம் இருந்து 9240 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இபலோகம  மற்றும் காகம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 30,34 வயதுடையவர்கள் ஆவர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )