வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை ; 04 பொலிஸ் குழுக்கள் விசாரணை

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை ; 04 பொலிஸ் குழுக்கள் விசாரணை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் , நான்கு குழுக்கள் தற்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை அவரது அலுவலகத்தில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )