
லொக்கு பெட்டியின் உதவியாளர்கள் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லொக்கு பெட்டியின் இரண்டு உதவியாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 26 இலட்சம் ரூபாய் பணம், ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் அலுத்கம பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஊரகஸ்மன்ஹந்திய, இந்துருவ பகுதிகளைச் சேர்ந்த 24,27 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அலுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

