மேலும் பல உயிர்களைப் பலி கொடுக்கும் முன், இந்த இணையவழி கடன் மாபியா தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுங்கள்

மேலும் பல உயிர்களைப் பலி கொடுக்கும் முன், இந்த இணையவழி கடன் மாபியா தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுங்கள்

அத்தனக்கல்லைப் பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியக்கிடைப்பதனால், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது போன்ற இணையவழி கடன் வழங்கும் பல சட்டவிரோத நிறுவனங்கள் காணப்படுவதனால், இது தொடர்பாக ஒரு முறையானதொரு சட்டத்தை அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை ஆராய்ந்து பாரத்து, மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், இதனை இல்லாதொழிப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கோரிக்கை விடுத்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )