2026 உலகக் கிண்ண தொடர் ; ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து தகுதி

2026 உலகக் கிண்ண தொடர் ; ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து தகுதி

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2026 உலகக் கிண்ணத் தொடருக்கு ஜேர்மனியும், நெதர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

இன்று (18) நடைபெற்ற ஸ்லோவாக்கியாவுடனான தகுதிகாண் போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வென்றே உலகக் கிண்ணத் தொடருக்கு ஜேர்மனி தகுதி பெற்றுள்ளது.

ஜேர்மனி சார்பாக லெரோய் சனே இரண்டு கோல்களையும், நிக் வொல்டமேட், சேர்ஜே நர்பி, றிட்லே பகு, அஸன் ஓட்ராகு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை தம நாட்டில் நடைபெற்ற லித்துவேனியாவுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கிண்ணத் தொடருக்கு நெதர்லாந்து தகுதி பெற்றது.

நெதர்லாந்து சார்பாக டிஜ்ஜனி றெஜின்டர்ஸ், கோடி கக்போ, ஸ்கெவி சிமொன்ஸ், டொனைல் மலன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )