
கொஸ்கம – பியகம பகுதியில் ரயில் மோதி கார் விபத்து ; மூவர் காயம்
கொஸ்கம-பியகம பகுதிகளில் நேற்று (27) பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக ரயில் ஒன்று கார் ஒன்றை மோதி விபத்துக்குள்ளாக்கியது.
விபத்தில் கார் தூக்கி வீசப்பட்டு, அதில் இருந்த தந்தை, மகன் மற்றும் உறவினர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் பலப்பிட்டிய மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் கூறியதாவது, சம்பவத்தன்றால் சமிக்ஞை விளக்கு ஒளிர்ந்து, பாதுகாப்பு மணி சத்தம் வழங்கியிருந்த போதும், கார் ரயில் மார்க்கத்தில் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.
தற்போது, கொஸ்கொட பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

