
ரத்மலானையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ரத்மலானை பகுதியில் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மவுண்ட் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மவுண்ட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

