ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வது பற்றி பரிசீலனை-டிரம்ப்

ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வது பற்றி பரிசீலனை-டிரம்ப்

ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:

“ஈரானின் பயங்கரவாத ஆட்சி தொடர்பாக மத்திய கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் எங்களது சிறந்த ராணுவ செயல்பாடுகளை குறைத்துக்கொள்வது பற்றி நாங்கள் பரிசீலித்து வருகிறோம். எங்களது நோக்கங்களை அடைவதற்கு மிக நெருக்கமாக நாங்கள் உள்ளோம்.”

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பாதையைப் பயன்படுத்தும் மற்ற நாடுகளே இதனைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் வேண்டும்.

அமெரிக்காவிற்கு அந்தப் பாதையின் அவசியம் இல்லை, ஏனென்றால் அமெரிக்கா அதனைப் பயன்படுத்துவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )