
மும்பை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.
இரு அணிகளின் உத்தேச பட்டியல்
மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப் டன்), ரூதர்போர்டு, மிட்செல் சான்ட்னெர், நமன் திர், பும்ரா, ஷர்துல் தாக்குர், டிரென்ட் பவுல்ட் அல்லது கார் பின் பாஷ் அல்லது தீபக் சாஹர், மயங்க் மார்கண்டே.
ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரெல், ரியான் பராக் (கேப்டன்), ஹெட்மயர், டோன வன் பெரேரா, ரவீந்திர ஜடேஜா, ஜோப்ரா ஆர்ச்சர், நன்ரே பர்கர், துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, ரவி பிஷ்னோய்.

