
மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் ரத்து ; சுகாதார அமைச்சர் அறிவிப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (09) நடத்தத் திட்டமிட்டிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிதச தெரிவித்துள்ளார்.
மருத்துவப் போராட்டம் தொடர்பான நிலைமைகளை இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்த அவர், குறித்த தீர்மானத்தை அறிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: “நிலைமை இவ்வாறு தொடர்ந்தால், இன்று அறிவிக்கப்பட்ட கலந்துரையாடலை நான் நடத்த மாட்டேன். இந்தப் போராட்டம் நியாயமற்றது. ஒரு அரசாங்கமாக இதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார்.

